உள்நாட்டு செய்திகள்

ஒரு நாளில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் !

கொழும்பின் ஜிந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குள்
நேற்று(14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும்
பலர் காயமடைந்துள்ளனர் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் களுத்துறையின் வடக்கு மதிய மங்கட பகுதியில்
நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 32 வயது நபர் களுத்துறை
போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ஒருநாளில் இடம்பெற்றவை
என்பதும் குறிப்பிடத்தக்கது. .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button