உள்நாட்டு செய்திகள்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ?

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைக்க பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது, அக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது, அதன்படி எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி க்கள் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடுவார்கள் எனவும் கூறப்படுகின்றது !




