உள்நாட்டு செய்திகள்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் !

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர்
திரு.வேல்நம்பி அவர்கள் நாளை (25) புதன்கிழமை பதவியேற்கவுள்ளார் !
இவர் தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில்
சிரேஷ்ட பேராசிரியருமாவார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில்
நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து முற்பகல் 9.30 மணிக்குத்
துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப்
பொறுப்பேற்கவுள்ளார் என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.




