விளையாட்டுச் செய்திகள்

கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

இந்திய இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நோர்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே தொடரில் கார்ல்சனை முதன்முறையாக கிளாசிக்கல் செஸ்ஸில் தோற்கடித்திருந்த பிரக்ஞானந்தா, தற்போது மீண்டும் அதே சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடும் போட்டிக்குப் பிறகு 62-வது நகர்வில் கார்ல்சன் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினார்.

இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா தொடரின் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு கருத்து தெரிவித்த பிரக்ஞானந்தா, “இது மிகப் பெரிய வெற்றி என்று நான் நினைக்கவில்லை. கடைசியில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.

“கார்ல்சனை வெல்வது சாதாரண விஷயம் அல்ல” என பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் வைபவ் சூரி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button