உள்நாட்டு செய்திகள்

நாளை ஆரம்பமாகும் O/L பரீட்சைகள் !

நாளைய தினம் (17) செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்
பிரதீப் கொடிப்பிலி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 117 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக மேலும் 4 புதிய
இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அதன்படி அவசர நிலமைகளின்போது குறித்த தொலைபேசி
இலங்கங்களுடன் தொடர்புகொண்டால் அதற்கான விபரங்கள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

011 366 8020

011 366 8100

011 366 8013

011 366 8010

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button