உள்நாட்டு செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, குறித்த சிறைக்கைதிகளுக்கு இவ்வாறு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button