விளையாட்டுச் செய்திகள்
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி

2026 பீபா (FIFA)உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அந்த அணி முதலாவது பாதியில் விளாசிய மூன்று கோல்களின் உதவியுடன் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், உலகக் கிண்ண போட்டியொன்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட கோல் வித்தியாசத்தில் அமெரிக்க அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.




