“பாகிஸ்தான் vs இலங்கை ” இன்று மாலை அடுத்த போட்டி !

பாகிஸ்தான் அணி கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியாக டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தாலும், 2015ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை அடுத்து தற்போது 10 ஆண்டுகளின் பின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்காக இலங்கை வந்துள்ளது. அதனடிப்படையில் கடந்த 07 ஆம்திகதி ஏற்கனவே ஒரு T20 போட்டி ஒன்று இடம்பெற்றது இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது, மீண்டும் மற்றுமொரு T20 போட்டியொன்று இன்று இலங்கை நேரப்படி மாலை 07 மணியளவில் தம்புள்ள மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அடுத்த மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் ICC, T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆயத்தமாகும் நோக்குடன் 10 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




