வெளிநாட்டுச் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2ஆவது இடம்

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இங்கு நடந்த மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்குப் பின் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதிபெற அவர் முதலிடத்தில் இருக்கும் தற்போதைய மேயர் கரேன் பாஸ் உடன் நேரடியாக மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போதைய மேயர் கரேன் பாஸ் 34.7 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆரம்பத்தில் மூன்றாம் இடத்தில் இருந்த நித்யா ராமன், தபால் வாக்குகள் எண்ணிக்கைக்குப் பின் 27.1 சதவீத வாக்குகளைப் பெற்று 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கேரளாவில் பிறந்த நித்யா ராமனின் பெற்றோர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தனது 6 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், எம்.ஐ.டி.யில் முதுகலைப் படிப்பையும் முடித்தவர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா தேர் தல் விதிமுறைப்படி, முதல்கட்ட தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்ற விதியுள்ளது. எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இந்த இறுதிப் போட்டித் தேர்தல் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button