வெளிநாட்டுச் செய்திகள்
ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களை இரத்து செய்ததாக ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை இரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைமையும் பிராந்தியத்தின் பல நாடுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இறுதி உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் போன்ற விபரங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




