வெளிநாட்டுச் செய்திகள்

ட்ரம்பின் 1 இலட்சம் டொலர் H-1B கட்டண முடிவு இரத்து

புதிய ஹெச் 1-பி (H-1B) விசாக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த ஒரு இலட்சம் டொலர் கட்டணத்தை சட்டவிரோதமானது எனக் கூறி அமெரிக்க நீதிமன்றம் இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 20 தலைமை வழக்கறிஞர்கள் இந்த கட்டண உயர்வுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே நீதிபதி சொரோகின் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மேலும் விசாவுக்காக வசூலிக்கப்படும் குறித்த கட்டணம், வரி அடிப்படையிலான கட்டணம் என்றே சுட்டிக்காட்டப்படும். வரிகளை நிர்ணயிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளதால், ஜனாதிபதி இந்த நடவடிக்கை பாராளுமன்றத்தின் உரிமையைப் பறிப்பதாகும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விசாவை விரைவாக பரிசீலனை செய்வதற்காக (15 நாட்களுக்குள்) இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஒரு இலட்சம் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக

சாதாரண விண்ணப்பங்களை பரிசீலிக்க குறைந்தது ஏழரை மாதங்கள் மாதங்கள் வரை தேவைப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button