உள்நாட்டு செய்திகள்
2019க்கு முன் வாங்கிய சிம் கார்டுகளுக்கு புதிய விதி

2019 ஆகஸ்ட் 2க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளின் பயனர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தற்போதைய விதிமுறைகள், அதற்குப் பிறகு வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்துவதால், பழைய சிம் கார்டுகளுக்கான முழுமையான தகவல்கள் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
இதனால் சட்ட மற்றும் குற்ற விசாரணைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
புதிய திருத்தங்களில்,
16–17 வயதினருக்கான பதிவு நடைமுறை
வெளிநாட்டவர்களுக்கு சிம் வழங்கும் விதிகள்
உள்ளடக்கப்படுகின்றன.
இதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.




