வெளிநாட்டுச் செய்திகள்

கனடாவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு,10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்
நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்
துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலைக்குள் நுழைந்த குறித்த மர்மநபர் சரமாரியாகத் துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொண்டுள்ளார், இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர்
வரையில் உயிரிழந்துள்ளனர், மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக
அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், சம்பவ இடத்திலேயே காயங்களுடன்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது, அவர் தன்னைத்தானே
சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button