வெளிநாட்டுச் செய்திகள்
உலக சந்தையில் உயர்வைக் கண்ட எரிபொருள் விலை !

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் எரிபொருள் விலை
திடீரென உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை $100 Dollars ஐ கடந்ததால்,
ஆசிய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளன.
ஜப்பானின் முக்கிய பங்குச்சந்தை குறியீடு Nikkei 225 இன்று காலை வர்த்தகம்
தொடங்கிய சில நேரத்திலேயே 6.2% வீழ்ச்சி
தென் கொரியாவின் KOSPI குறியீடும் 6.3% வரை சரிந்தது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பங்குகளும் 3% க்கும் மேல் வீழ்ச்சி
இதற்கிடையில், அமெரிக்க பங்குச்சந்தை
1.9% வரை குறைந்துள்ளன, போரின் காரணமாக எண்ணெய் விநியோகம்
பாதிக்கப்படுமோ என்ற அச்சம், உலக பொருளாதார சந்தைகளில் பெரும்
அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.



