உள்நாட்டு செய்திகள்
சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு !

நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதன் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, சந்தையில் 4,100 ரூபாவாக காணப்பட்டது, அவ்வாறே, 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,710 ரூபாவாகும்.




