உள்நாட்டு செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று சிறு வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று (11) மீண்டும் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.6794 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.8279 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய (10) தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 324.66 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 335.39 ரூபாயாகவும் காணப்பட்டது.

இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறியதொரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button