உள்நாட்டு செய்திகள்
விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு !

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி வயல்
பிரதேசத்தில், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளை நேற்று செவ்வாய்க்கிழமை வாகரை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அந்த வயலில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தவர் வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக குழிதோண்டும் போது மர்மப் பொருள்கள் தென்படுவதை அவதானித்து வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதிவானின் அனுமதியைப் பெற்ற விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த வெடிபொருட்களை மீட்டெடுத்தனர்,
இந்தப் பகுதியில் கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவ
முகாம் அமைந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




