உள்நாட்டு செய்திகள்
திருமதி ஜூலி சங் விடைபெற்றார் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றி, தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சங் (Julie Chung), நேற்றைய தினம் திங்கட்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கடந்த 2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சங் மூன்று வருடங்களாக இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கான தூதுவராக சிறப்பாக கடமையாற்றியமை உள்ளிட்ட பல விடயங்களை இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.




