வெளிநாட்டுச் செய்திகள்
ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்துவர அரசு திட்டம் !

ஈரானில் ஏற்பட்ட பொருளாதார சரிவுகாரணமாக அங்கு அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் அதிகரித்தன அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் இதை எதிர்த்து அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுவந்த நிலையில், அங்கு 2000ற்கும் அதிகமான பொதுமக்கள், பொலிஸார் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அங்குள்ள தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள சேவைகளும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது , இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்துவர இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அங்கு வேலைகளுக்காக சென்றவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 10,000 ற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




