வெளிநாட்டுச் செய்திகள்
ஈரானின் பல இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல் !

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக்
குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தாக்குதல்களைத்
தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடங்கியது. கடந்த 14 நாள்களாக இரு
தரப்பும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின்
மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேலிய விமானப் படை
தாக்கி உள்ளது. புலனாய்வு இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 10 இற்கு மேற்பட்ட விமானப்படை
போர் விமானங்கள் ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் விரிவான தா்குதல்களை நடத்தி முடித்துள்ளன.




