வெளிநாட்டுச் செய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலேசியா சென்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார்.
அங்கு பிரம்மாண்ட வரவேற்புடன் வரவேற்கப்பட்டார்,மேலும் அங்கு பல அரச நிகழ்வுகளில்
கலந்து சிறப்பித்த அவர், இரண்டாம் நாளான நேற்று (08) கோலாலம்பூரில் உள்ள
பெர்தானா புத்ராவில் (மலேசிய பிரதமர் அலுவலகம்) அந்நாட்டு
பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்போது , அவர்கள்
முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், செமி கண்டக்டர் உற்பத்தி, பேரிடர் மேலாண்மை,
ஊழல் தடுப்பு நடைமுறைகள், புலிகள் பாதுகாப்பு, ஐ.நா. அமைதிப் படைக்கு பங்களிப்பது
உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.




