உள்நாட்டு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்து ஒருவர் பலி !

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில்
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை,
மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.

பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில்
பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற
பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள
நிலையில், மற்றைய இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்திய
சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button