உள்நாட்டு செய்திகள்

காலி துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

காலி, தங்கெதர பகுதியில் கடந்த 12 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பண்டாரகம பொலிஸ் பிரிவின் மில்லகஹ சந்தியில் வைத்து, குறித்த நபர் 3 கிராம் 810 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (29) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னதாக, வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு இரு சந்தேக நபர்கள் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 12 ஆம் திகதி காலை 7:30 மணியளவில் கார் ஒன்றில் வந்த துப்பாக்கிதாரி, நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button