உள்நாட்டு செய்திகள்
பெண்கள் ஆணைக்குழுவின் தலைவி பதவி விலகல் !

இலங்கையின் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் (NWC) தலைவி கலாநிதி ரமணி ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ‘சிலோன் டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழு, போதிய நிதி ஒதுக்கீடு, பிரத்தியேக அலுவலகம் அல்லது ஊழியர்கள் இன்றி இயங்க முடியாத நிலையில் உள்ளதாக ஏனைய ஆணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பெண்க விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவரை நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமித்தமை மற்றும் அமைச்சின் அலுவலகத்திலிருந்தே ஆணைக்குழுவை இயங்கச் செய்ய முயற்சித்தமை போன்றவை அதன் சுயாதீனத்தன்மையை மீறுவதாக அவர்கள் கருதுகின்றனர்.
அமைச்சுக்கு அடிபணிந்த ஒரு ‘பெயரளவு’ அமைப்பாக இதனை மாற்ற முயற்சி நடப்பதாகவும், இதற்காக ஆணையாளர்களுக்குப் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




