உள்நாட்டு செய்திகள்
நாமல், ஷிராந்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




