அமெரிக்காவில் குடும்ப சண்டையில் 6 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மஸ்கடின் என்ற பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்துள்ளார். குடும்ப தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதில், தகவல் அறிந்து பொலிஸார் வீடு ஒன்றிற்கு சென்றனர்.
அப்போது, 4 பேர் துப்பாக்கி சூட்டில் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்த காணப்பட்டதாக பொலிஸாருக்கு பின்னர் தெரியவந்தது. அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவரின் உறவினர்கள் என நம்பப்படுகிறது. ரியான் வில்லிஸ் மெக்பார்லேண்ட் என்பவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸார் வருவதற்கு முன்பே அந்த வீட்டில் இருந்து அவர் தப்பி விட்டார். இதேபோன்று மற்றொரு வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயத்துடன் மற்றொரு ஆண் மற்றும் அலுவலகம் ஒன்றில் இன்னொரு ஆணும் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்து கிடந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை தேடி சென்றபோது, பாலம் ஒன்றின் அருகே மெக்பார்லேண்ட் கிடந்துள்ளார்.
அங்கு அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவருக்கு கடந்த காலத்தில் குற்ற சம்பவத்துடன் தொடர்பு உள்ளது என தெரிவித்த மஸ்கடின் நகர பொலிஸ் தலைவர் அந்தோணி கீஸ், இதுபற்றிய வேறு தகவல்கள் அறிந்த நபர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.




