உள்நாட்டு செய்திகள்
விசேட சோதனை நடவடிக்கைகள் – 777 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது நேற்று முன்தினம் மட்டும்(06)
777 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சோதனையின்போது ஹெரோயின் 434 கிராமும் ஐஸ் 477 கிராமும்
கொக்கெய்ன் 2 கிராம் 536 மில்லி கிராமும் கஞ்சா 5 கிலோ கிராம் 658 கிராமும் மீட்கப்பட்டுள்ளன
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




