விளையாட்டுச் செய்திகள்
யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தம் !!

யாழ்ப்பாணம்,மண்டைதீவு பகுதியில் நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் மைதான
மற்றும் விளையாட்டு வளாகம் நிர்மாணப் பணிகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை
உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது, குறித்த 48 ஏக்கர் பகுதியை உள்ளடக்கிய இந்த
திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வரவில்லை எனவும், சுற்றுச்சூழல் அனுமதியின்றி
நிலத்தை சமப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




