உள்நாட்டு செய்திகள்
நாட்டின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு !

வளிமண்டலவியல் திணைக்கள வானிலை முன்னறிவிப்பின் படி மேல், சப்ரகமுவ,
மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும்
அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை
அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில
இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும்
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான
நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை
அறிவுறுத்தியுள்ளது.



