உள்நாட்டு செய்திகள்

QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான
பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக்
கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

அதிகமானோர் தமது QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
ஒப்பீட்டளவில் மிக குறைவானோரே சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும்
முயற்சிப்பதன் மூலம் இந்த QR குறியீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் குறிப்பிட்டுள்ளார்.

QR ஒதுக்கீடு இந்த வார இறுதியில் முடிவடைவதால், QR குறியீட்டைச் சீர்செய்து
உங்களுக்குரிய எரிபொருள் அளவைப் பெற்றுக்கொள்ளுங்கள், அத்துடன், சில
தரப்பினரிடம் உள்ள வாகன பதிவுச் சான்றிதழ் முறையாக மாற்றப்படாமல்
இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை
முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button