உள்நாட்டு செய்திகள்
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை மறைத்தவருக்கு கடுங்காவல் தண்டணை !

சட்டவிரோதமான முறையில் 4 லீற்றர் பெற்ரோலைத் தனது கைவசம்
வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கொபைக்கனே பொலிஸாரால் கைது
செய்யப்பட்ட 48 வயதுடைய பி.எம். லசந்த குமார பாலசூரிய என்பவருக்கு
21 நாட்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 1,500 ரூபா அபராதம்
விதித்து நிக்கவரட்டிய நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1979 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள்
(வழங்கல் மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராகக்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் தனது குற்றத்தை
அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, நிக்கவரட்டிய நீதவான் சந்தன லியனகே
இந்தத் தண்டனையை வழங்கினார்.




