விளையாட்டுச் செய்திகள்
கிரிக்கெட்டில் புதிய விதி மாற்றங்கள் அறிமுகம் !

கிரிக்கெட் விதிகளை நிர்ணயிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் புதிய விதி மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 2026 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் விதிகளில் புதிய பதிப்பிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி கிரிக்கெட் விதிகளில் புதிதாக மொத்தம் 73 விதி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதோடு, டெஸ்ட் போன்ற பல நாட்கள் நடைபெறும் போட்டிகளின் விதிகள், ஹிட் விக்கெட் விதியில் உள்ள குழப்பத்தை தவிர்க்கும் விதிகள், ஓவர் த்ரோ மற்றும் மிஸ்பீல்ட் ஆகியவற்றுக்கு இடையே இருந்த குழப்பங்களைத் தீர்க்கும் விதிகள் போன்ற பல விடயங்கள் இதில் அடங்கும் என மெரில்போன் கிரிக்கெட் கழகம் குறிப்பிட்டுள்ளது.




