உள்நாட்டு செய்திகள்

இன்று நாட்டின் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் !

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இன்றைய (13)
காலநிலை அறிக்கையின் படி, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு
மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்
அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு,
நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்
சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அது போன்று வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை
மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல
இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ
பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை,
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான
ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என குறித்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button