வெளிநாட்டுச் செய்திகள்

பாகிஸ்தான் மசூதி தற்கொலை குண்டுத் தாக்குதல், பலி எண்ணிக்கை அதிகரிப்பு.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜதுல் குப்ரா (Imam Bargah Qasr-e-Khadijatul Kubra) மசூதியில்
நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக
அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன மேலும் அதிகமானோர் காயமடைந்து அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை
பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இத் தாக்குதல் நடவடிக்கைக்கு “இஸ்லாமிக் ஸ்டேட் (IS)” அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக SITE Intelligence Group
தெரிவித்துள்ளது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button