வெளிநாட்டுச் செய்திகள்
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் !

கனடா பிரதமர் மார்க் கார்னி எதிர்வரும் பெப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள
உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பெப்ரவரி 26 அன்று அவர் இந்தியா வருகை தர உள்ளார். அன்றைய தினம்
முதலில் மும்பையில் தரையிறங்கும் அவர், அங்கு இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களுடன்
கலந்துரையாடுவார் எனவும் பின்னர் இந்திய பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மார்க் கார்னி இந்தியாவிற்கு வருகைதரும் முதற்தடவை
இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.




