உள்நாட்டு செய்திகள்

கண்டி – குருநாகல் வீதியில் கோர விபத்து

கண்டி – குருநாகல் வீதியின் உடகொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.

கண்டியிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, முன்னால் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பின்னால் பயணித்தவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மாவதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button