உள்நாட்டு செய்திகள்
பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு !!

தும்மோதர – போலவத்த பிரதான வீதியில், வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார், தம்மிஸ்சர தேசிய பாடசாலையில் க.பொ. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார் எனவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன,
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியமையே குறித்த சம்பவத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது, விபத்தில் காயமடைந்த மாணவனை உடனடியாக மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அந்த மாணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.




