உள்நாட்டு செய்திகள்
தவறான இடத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, சிறுமி காயம் !

கொஹுவல, சரணங்கரா சாலையின் போதியவட்டா பகுதியில், வாகனம் ஓட்டிச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி , மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தப்பிச் சென்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தவறான இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகிலுள்ள வீடுதான் இலக்கு என அதிகாரிகள் நம்புகின்றனர்.
காயமடைந்த குறித்த இளம்பெண் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து மருத்துவமனை சார்பில் எந்தவித அறிக்கைகளும் வெளியாகவில்லை !




