உள்நாட்டு செய்திகள்
வடக்கு கரையோரத்தில் பலத்த காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை

காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.




