உள்நாட்டு செய்திகள்

மாகந்துர, பஸ்னகந்த பகுதியில் மண்சரிவு அபாயம்

கொடகவெல, மாகந்துர, பஸ்னகந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக அங்கு வசித்து வந்த ஆறு குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மலை உச்சியில் இருந்த பல பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும், பாறைகள் உருண்டு விழும் அபாயமும் காணப்படுவதால், ஆறு வீடுகளில் வசித்து வந்த இந்த மக்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதி தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button