வெளிநாட்டுச் செய்திகள்

ஒலிபெருக்கியில் மறைத்து கொண்டுவந்த தங்கம்

இண்டிகோ நிறுவனத்தின் டுபாய்–அகமதாபாத் விமானத்தின் கழிப்பறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி ஒன்றிலிருந்து சுமார் 4.26 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டுபாயிலிருந்து அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது விமானத்தின் முன்பக்க கழிப்பறையிலுள்ள ஒலிபெருக்கியின் உள்ளே கருப்பு நிற பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்ட இரண்டு பொதிகளை கைப்பற்றினர்.

அதில், 2.7 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 4.26 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பொறியாளர்களின் உதவியுடன் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button