விளையாட்டுச் செய்திகள்
இலங்கை – பாகிஸ்தான் சமநிலையில் முடிவடைந்தது !

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றுவருகின்றது, அதில் 3ஆவதும் இறுதியுமான T20 போட்டி நேற்று ஞாயிற்றுக் கிழமை (11) தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்றது, இப் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது,
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 160 ஓட்டங்களை பெற்றது, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது இதனால் இத் தொடர்தொடர் 1 – 1 என சமநிலையில் நிறைவடைந்தது.




